வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வருவாய்துறை பணியாளர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அரசு விடுமுறை நாட்களில் பணிக்கு நிர்பந்திக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி, வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு போதிய நேரம் வழங்கப்படாமல் இருப்பது குறித்து பணியாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அவர்களின் முக்கிய கோரிக்கைகள்:
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்
-
அரசு விடுமுறை நாட்களில் பணிகளை மேற்கொள்ள நிர்பந்திக்கக் கூடாது
-
ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

No comments:
Post a Comment